(UTV | கொழும்பு) – அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.