உள்நாடு

கொழும்பில் சூப்பர் டெல்டா உருவாகும் அபாயம்

(UTV | கொழும்பு) –   கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொவிட் – 19 வைரஸின் திரிபான ‘டெல்டா’ தொற்றே பரவிவருகின்றதாக ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் ‘சுப்பர் டெல்டா’ திரிபு உருவாகலாம் என்ற சந்தேகம் இருப்பதால் அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இந்தியாவின் டெல்டா பிளஸை விடவும் ‘சுப்பர் டெல்டா’ வீரியம் கொண்டதா என்பது தொடர்பில் எமக்கு இதுவரை தெரியாது. எதிர்காலத்தில் பரவுமா என்பது தொடர்பில் ஆய்வு நடத்த கால அவகாசம் வேண்டும். இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாட்டில் தடுப்பூசி திட்டம் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருவதால் செப்டம்பர் மாதம் இறுதியளவில் நாட்டுக்கு நன்மையளிக்ககூடிய வகையிலான சூழல் உருவாகும் என ஊகிப்பதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நேற்று 557 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

பாயிஸ் முஸ்தபா தென்கிழக்கு பல்கலையின் வேந்தராக நியமனம்!

பிரதமரின் விலகல் – உண்மையில்லை என்கிறது பிரதமர் ஊடகப் பிரிவு