(UTV | கொழும்பு) – தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தின்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்னதாக எதிர்வரும் 30 ஆம்திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.