(UTV | காபூல்) – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று மாலை இடம்பெற்ற இரண்டு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமிட் ஹர்சாய் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று (26) இரவு அடுத்தடுத்து இரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.
இந்த குண்டுத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆரம்பத்தில் குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் 13 அமெரிக்க படையினர் உள்ளிட்ட 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 140 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.