உள்நாடுவணிகம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு திங்களுடன் தீர்வு

(UTV | கொழும்பு) –  லாப் நிறுவனம், தன்னுடைய உற்பத்தியை நிறுத்தியமையால், உள்ளூர் சந்தைகளில் கடந்தவாரம் சமையல் எரிவாயுவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது.

லிற்றோ நிறுவனம் பழைய விலைக்கே சமையல் எரிவாயு விநியோகத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தது. இந்நிலையில், லாப் நிறுவனம் புதிய விலைக்கு சமையல் எரிவாயு விநியோகத்தை கடந்த 20ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், அவ்விரு நிறுவனங்களுக்கும் கடந்த 21ஆம் திகதியன்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டிருந்தார்

அங்கிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த இராஜாங்க அமைச்சர், உள்ளூர் சந்தையில் நிலவிய காஸ் தட்டுப்பாட்டுக்கு, நாளை (23) தீர்வு காணப்படும். எதிர்காலத்தில் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றார்.

Related posts

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club ஆயத்தம்

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் கைது

UNPயோடு இணையும் 13 SLPP அமைச்சர்கள்!