உள்நாடு

நிறுவன பிரதானிகள் கோரினால் பொதுப்போக்குவரத்து சேவை வழங்க தயார்

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதும் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

நேற்றிரவு 10மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள், என்பனவற்றை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ள காலப்பகுதியில் முன்னெடுத்து செல்லுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவன பிரதானிகள் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் முற்றுகை

மக்களின் துயரங்களை சந்தைப்படுத்தி ரணில் அநுர இரகசிய கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற முயற்சி – சஜித்

editor

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்