உள்நாடு

பதிவுத் திருமணம் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன விளக்கமளித்துள்ளார்.

இதற்கமைய, பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும்.

இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இன்று முதல் தனிமைப்படுத்தல் உத்தரவை மிகவும் கடுமையாக அமுலாக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அனைவரும் அதற்கமைய செயற்படுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் அடுத்த வாரமளவில்

முட்டை இறக்குமதி தொடர்பான புதிய தகவல்

எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியை கண்ட இலங்கை