உள்நாடுவணிகம்

சில விசேட பொருட்களுக்கு வர்த்தக வரி

(UTV | கொழும்பு) – ஒரு கிலோகிராம் கருவாடு மற்றும் நெத்திலி மீது 100 ரூபா விசேட பொருட்களுக்கான வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி திருத்தத்தை மேற்கொள்ளும் வகையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ விடுத்துள்ள வர்த்தமானியில் மேலும் சில பொருட்கள் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பட்டர் உற்பத்திகள் மீதும் 880 ரூபா விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் வெந்தயம் மீது 50 ரூபா வரியும், ஒரு கிலோகிராம் குரக்கன் மா மீது 150 ரூபா வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் கடுகு மீது 62 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் உப்பு மீதும் 40 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள 40 ரூபா வரியில் 10 ரூபாவை மாத்திரம் அறவிட்டு எஞ்சிய தொகையை வணிக நோக்கம் இல்லாமல் ஔடதங்களை உற்பத்தி செய்யும் ஔடத உற்பத்தி நிறுவனமொன்றுக்கு விடுவிக்கவுள்ளதாகவும் வரத்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

‘பயங்கரவாதத்தின் எந்தச் செயற்பாடுகளுடனும் எமக்கு தொடர்பில்லை’ –10 மணி நேர விசாரணையின் பின்னர் ரிஷாட்

நாட்டில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் வரி செலுத்த வேண்டுமா?

“அரசின் IMF கலந்துரையாடலில் எனக்கு கவலையில்லை” – விமல்