கேளிக்கை

சூர்யா படத்தில் ராதிகா

(UTV |  இந்தியா) – சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அருண்விஜய்யின் 33-வது படம் ஆகிய படங்களில் நடித்து வந்த ராதிகா தற்போது சூர்யா படத்தில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிகை ராதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை ராதிகா, சூர்யாவுடன் எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் (video)

நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை – ராதிகா ஆப்தே

தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமண வரவேற்பு