கிசு கிசு

சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் தடை

(UTV | கொழும்பு) –  சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, கோவ்ஷீல்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் பிரான்ஸிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

  • ஃபைசர் – இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • மாடர்னா -இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • அஸ்ட்ராஜெனெகா மற்றும் கோவ்ஷீல்ட் – இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • ஜான்சன் அண்ட ஜான்சன் – முதல் அளவு செலுத்திக்கொண்ட 4 வாரங்களுக்குப் பின்னர் பிரான்சிற்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை ஒரு அரசியல் சூழ்ச்சியே?

உலகின் ஏழு அதிசயங்களும் ஒரே இடத்தில்

தேர்தல் பிரச்சாரம்: கோத்தாவின் பாதுகாப்பிற்கு யோசிதவினால் தொண்டர் குழு