உள்நாடுவணிகம்

பத்து இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) –    பத்து இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியானமையை அடுத்து நேற்றைய தினம் ஒரு இலட்சத்துக்கும் அதிக எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் லிட்ரோ நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது

Related posts

தொடர்ந்தும் பாடசாலைகள் மூடும் நிலை

ஏப்ரல் 21 தாக்குதல் : அமைச்சரவையில் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

சட்டவிரோதமகா இயங்கிய மதரஸா – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!