விளையாட்டு

ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த பெலருஸ் பயிற்சியாளர்கள்

(UTV |  டோக்கியோ)- டோக்கியோவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தடகள வீரரை வெளியேற கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு பெலருஸ் பயிற்சியாளர்கள் ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர்.

ஆர்தூர் ஷிமாக் மற்றும் யூரி மைசெவிச் ஆகியோரே இவ்வாறு ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்துள்ளதுடன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC), அவர்கள் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேறியதையும் உறுதிப்படுத்தியது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், தேசிய பயிற்சியாளர் ஊழியர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, தனது அணியின் விருப்பத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 வயதான கிரிஸ்டினா சிமானுஸ்காயா ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.

பெலருஸுக்குத் திரும்பினால் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இச்சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

பின்னர் அவருக்கு போலாந்தினால் மனிதாபிமான விசா வழங்கப்பட்டதுடன், தற்சமயம் அவர் போலந்தில் இருக்கிறார்.

Related posts

ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்களின் விபரம்!

சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் விலகல்

இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்-லசித் மாலிங்கவிற்கு 20 சதவீத அபராதம்