(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் தூதுவராலய பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமத் மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்பாளர் அஸ்மா கமல் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது, இரு நட்பு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் ,பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல் ஆகியவை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதோடு பல சாத்தியமான துறைகளில் இரு நாட்டு கூட்டு முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளை மேம்படுத்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.