உள்நாடுவணிகம்

Sapphire Cluster கொள்வனவு செய்வதில் வெளிநாட்டவர்கள் ஆர்வம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர்.

குருந்தம் வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி – இரத்தினக்கல் எனக்கருத்தப்படும் இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster, இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

510 கிலோகிராம் எடை கொண்ட Sapphire Cluster என்றழைக்கப்படும் இந்த இரத்தினக்கல் தொகுதி வீடொன்றிற்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்திருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்தது;

இதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது.

Related posts

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது – அலிசப்ரி.

சுங்க திணைக்களத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு!