(UTV | கொழும்பு) – தேர்தல் சட்ட சீர்த்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 7 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகளில் லிபரல் கட்சி, அகில இலங்கை தமிழர் மகாசபை உட்பட 7 கட்சிகள் தமது பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.