உள்நாடு

சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு வரவுள்ளார். இவரது விஜயம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 திகதி இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடவுள்ளார் .

சீன பிரதமர் துறைமுக நகரின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது கொழும்பு துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு விவகாரம் மற்றும் சீனாவின் பொறுப்புகள் என்பது குறித்து உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்படவுள்ளது. கொழும்பு துறைமுக நகர் குறித்து தேசிய அரசியலிலும் சர்வதேச அரங்கிலும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ள நிலையில் சீன பிரதமர் இலங்கை வருகிறார்.

துறைமுக நகருக்கு சீனா கொடுத்துள்ள முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலேயே சீன அரசு உயரிய பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

   

Related posts

குமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை

பேருந்து சேவைகள் முன்னெடுப்பு தொடர்பில் விசேட யோசனை

பால் தேநீர் விலையில் மாற்றம்