உள்நாடு

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இன்று(19) முற்பகல் 10 மணி முதல் மாலை 5.30 வரை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், நாளைய தினமும் விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 44 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

   

Related posts

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி இராஜினாமா ; முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது -ந.ஶ்ரீகாந்தா.

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு

LPL போட்டித் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி