வணிகம்

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்பாளர் திருமதி அஸ்மா கமால் அவர்கள், காலி மாவட்ட வர்த்தக மற்றும் தொழில்துறை அலுவகத்திற்கு விஜயம் செய்து அதன் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது, காலி பிராந்தியத்தின் தேயிலை மற்றும் வாசனைத்திரவியப்பொருட்கள் (மசாலா) ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதோடு , மருந்து வகைகள், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற துறைகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

Related posts

யாழில் 02 உற்பத்தி வலயங்கள்

WhatsApp செயலி பாவனையாளர்கள் கவனத்திற்கு

தொழிலாளர் வர்க்கம் அரசாங்கத்தை ஆதரிப்பது மேதினத்தில் தெளிவாகியுள்ளது