உள்நாடு

பதினெட்டு வயதுக்கு கீழ் கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை

(UTV | கொழும்பு) – பதினெட்டு வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பான பரிந்துரைகள் எதுவும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சினோவெக் மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசிகள் சில நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதனை இலங்கையிலும் அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தடைகளை தாண்டி பொலிகண்டி போராட்டப் பேரணி தொடர்கிறது

கிஹான் பிலபிட்டிய கைது செய்யப்படுவதை தடுக்க ரிட் மனு தாக்கல்

“நஜீப் ஏ.மஜீதின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்!