உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

ஓய்வூதியதாரர்களுக்கான அறிவித்தல்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு