உள்நாடு

இன்றும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் இன்று(13) இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் நேற்று (12) முதல் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், தனிமைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைபடுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் வீடுகளுக்கு

மகசின் சிறைச்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ – சீனா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு [VIDEO]