உள்நாடு

இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் விலகல்

(UTV | கொழும்பு) – இன்று முதல் இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், அதிபர் சேவையாளர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ள இணைய வழி ஊடான கற்பித்தல் புறக்கணிப்புக்கு அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்

இன்று முதல் நான்காவது டோஸ் தடுப்பூசி