உள்நாடு

சிறுமி விற்பனை விவகாரம் : வெளிநாட்டு பிரஜையும் சிக்கினார்

(UTV | கொழும்பு) – கல்கிஸை பகுதியில் இருந்து 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சிறுமியை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொண்ட மாலைத்தீவு பிரஜை ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக அறை ஒன்றை வழங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தற்போதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு விளையாட அனுமதி!

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் !

விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட மேலும் ஒரு வர்த்தமானி!