(UTV | கொழும்பு) – சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சென்றவர்களுக்கான புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றவர்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல்14 ஆம் திகதி வரை இலங்கைக்கு வர அனுமதியில்லை என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.