உள்நாடு

AstraZeneca-விற்கு இரண்டாவது டோஸாக Pfizer தடுப்பூசி

(UTV | கொழும்பு) – முதலாவதாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது டோஸாக Pfizer தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

இதேவேளை, உலக சுகாதார நிறுவனத்தின் COVAX திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்தில் 264,000 AstraZeneca தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

ஏற்கனவே AstraZeneca தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு அவை வழங்கப்படவுள்ளதுடன், Pfizer தடுப்பூசியும் இரண்டாவது டோஸாக வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் உலக தடுப்பூசி நன்கொடை திட்டத்தின் கீழ் கிடைக்கவுள்ள Moderna தடுப்பூசியினையும் இரண்டாவது டோஸாக வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கை இடைநிறுத்தம்!

மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கு IMF இன்றுஅனுமதி ?

அஜித் பிரசன்னவிற்கு பிணை