(UTV | கொழும்பு) – தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
சுமார் 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த 2020 ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவி தேசியப்பட்டில் ஊடாக இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.