(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் கலந்துரையாடும் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இன்று (21) கொழும்பில் நடைபெறவுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில், நீதியமைச்சில் நடைபெறும் இக்கலந்துரையாடலில், தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இக்கலந்துரையாடலில் புதிய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் அதிகாரிகள், கடற்றொழில், வன ஜீவராசிகள் திணைக்களங்களின் அதிகாரிளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட மொத்தப் பாதிப்புக்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படுமெனவும் தகவல் வெளியாகியுள்ளது.