விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி?

(UTV | இங்கிலாந்து) – இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 18ம் திகதி தொடங்கிய நிலையில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது

இதனையடுத்து நேற்று(19) நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி துடுப்பாட்டம் செய்ய முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

இதில் இந்திய அணியின் ரோகித் சர்மா 34 ஓட்டங்களுடனும், சுபன் கில் 28 ஓட்டங்களுடனும், புஜாரே 8 ஓட்டங்களுடனும், ஆட்டமிழந்த நிலையில் விராத் கோலி மற்றும் ரஹானே ஆடி வருகின்றனர்.

விராட் கோலி 44 ஓட்டங்களும், ரஹானே 29 ஓட்டங்களும், எடுத்து வரும் நிலையில் நேற்று 65ஆவது ஓவர் வீசப்பட்ட போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நேற்றைய ஆட்டம் நிறுத்தப்படுவதாக நடுவர் அறிவித்தார். இதனை அடுத்து இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இரண்டு நாள் முழுக்க முடிவடைந்து விட்ட போதிலும் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியவில்லை என்பதால் இந்த ஆட்டம் டிராவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

இலங்கை கிரிக்கட் முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது

அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை

இலங்கை அணியானது 161 ஓட்டங்களால் வெற்றி