(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 பேருக்கு எதிராக எதிர்வரும் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. முறையான விசாரணைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சாரா உயிருடன் இருப்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
அவர் இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல் விசாரணை நடவடிக்கைகளை திசைத்திருப்பும் வகையில் அமைந்துள்ளது.
சாரா தொடரபில் இந்திய புலனாய்வு பிரிவினர் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.