உள்நாடு

திங்கள் முதல் ரயில் சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  பயணக்கட்டுப்பாட்டுத் தடை எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் ரயில் சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக ரயில்வே திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்திருந்தார்.

ரயில் சேவையின் போது, கடந்த காலங்களில் மாகாணங்களுக்கிடையே பின்பற்றப்பட்ட முறையே இந்த தடவையும் பின்பற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 21ம் திகதி காலை பயணக்கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 முதல் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுலாகும்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்தும் நிலவும்.

Related posts

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை

வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

editor

நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி