வகைப்படுத்தப்படாத

எம்பி’க்களுக்கான ஆடம்பர வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடம்பர வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தப்பட்டதன் மூலம் 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தற்போது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வாகன இறக்குமதிக்கான பெறுகை முழுமையாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

“.. அம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரு பில்லியன் ரூபா செலவாகும். மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதில் அரசாங்கம் பின் நிற்கப்போவதில்லை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் விவாட் கப்ரால் கூறினார்.

பயணத்தடை அமுலில் இருந்த காலப்பகுதியில் நாட்டிற்கு 45,000 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளுர் உற்பத்திகளினால் கிடைக்கும் வருமானம் 1,500 கோடி ரூபாவினால் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பயணத் தடை காலப்பகுதியில் சிறிய அளவிலான வர்த்தகர்களின் வருமானம் வீழ்ச்சி கண்டிருப்பதனால் கடன் செலுத்தும் வீதமும் குறைவடைந்திருக்கின்றது. இது பொருளாதாரத்தில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது..”

இதேவேளை, அரச சேவையாளர்களில் அதிகளவானோருக்கு வேலை வழங்காது சம்பளம் வழங்கும் நிலை ஏற்பட்டிப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டினார்.

 

Related posts

Case against Chief of Defence Staff postponed

4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர்மேன் பாணியில் காப்பாற்றிய வாலிபர்-(VIDEO)

வழமை நிலைக்குத் திரும்பும் கேரளா…