உள்நாடு

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன்

(UTV | வொஷிங்டன்) –  இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராகவும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

 கண் வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடை நிறுத்தம்

அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்!

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை