கிசு கிசு

தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்துக்கு நீடிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

“பயணத் தடையின் காரணமாக கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை..

ஆகவே, பயணத் தடையை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாகவும் தினமும் இது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்..” என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

Related posts

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற நபர் ஒருவர் திடீர் உயிரிழப்பு

ஈரான் மீதான தாக்குதல் இரத்து?

உலகின் தனிமையான வாத்து இறந்தது