(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்த பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியினதும் பிரதமரினதும், சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களினதும் பங்குபற்றலுடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவினால் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
வாழ்க்கைச் செலவு தொடர்பிலான உப-குழு, கடந்த 9ஆம் திகதியன்று கூடியது எனத் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜபக்ஷ ஆகிய மூன்று ராஜபக்ஷர்களும் இருந்தனர் என்றார்.
அவர்கள் மட்டுமன்றி, அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, டலஸ் அழகபெரும, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட நானும், இராஜாங்க அமைச்சர்களான அஜிட் நிவாட் கப்ரால், லசந்த அழகிய வண்ண ஆகியோரும் பங்கேற்றிருந்தோம் என்றார்.