உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 137,067 பேருக்கு கொவிட் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 137,067 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் அதிகளவான பேருக்கு தடுப்பூசி நேற்றைய தினமே போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், நாட்டில் இதுவரை 2,259,385 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (12) மாத்திரம் 59,881 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1,269,157 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 76,615 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 181 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 355,358 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 64,986 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீர் விநியோகத்தில் மின்சாரத்தை விட விவசாயத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும்

சமையல் எரிவாயு தொடர்பில் வர்த்தமானி

தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 164 பேர் வீடுகளுக்கு