உள்நாடு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருள் விலை

(UTV | கொழும்பு) –  இன்று முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 157 ரூபாவாகும்.

அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப வேண்டும் – யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

அரச நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை இன்று வெளியாகும்