உள்நாடு

சுற்றாடல் சட்டங்களை மீறுவோருக்கான அபராதத் தொகை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  சுற்றாடல் சட்டங்களை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, புதிய சட்ட திருத்தத்தினூடாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

தற்போது அமுலிள்ள 5,000 ரூபா அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

சுற்றாடல்சார் செயற்பாடுகளுக்காக அனுமதி பெற்ற போதிலும், காலாவதியான அனுமதிப்பத்திரங்களுடன் செயற்படுவோர் அடையாளம் காணப்பட்டால், அனுமதிப்பத்திரம் காலாவதியாகிய திகதி முதல் அமுலாகும் வகையில் அபராதத்தை அறவிடவும் புதிய சட்ட திருத்தத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதுவரை சதுப்பு நிலம் என்ற பதத்திற்கு காணப்பட்ட குறைபாடு, புதிய சட்ட திருத்தத்தினூடாக மறுசீரமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Related posts

முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொரோனா பரிசோதனை

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

editor