உள்நாடு

ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படுகின்றது

(UTV | கொழும்பு) –  சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை இன்றும் (10) நாளையும் (11) பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோரின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவினை வைப்பிலிட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு செல்வதற்கு இராணுவத்தினரால் இலவச பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வற்கும் பஸ்களில் பயணிப்பதற்கும் ஓய்வூதியத்திற்கான அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் 667,710 ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போலி நாணயத்தாளுடன் இருவர் கைது!

ஷெஹான் மதுசங்க மீண்டும் விளக்கமறியலில்

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி