உள்நாடு

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று

(UTV | கொழும்பு) –  கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை விசேட ஸ்டிக்கர் அடிப்படையில் வகைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

11 நிறங்களில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் இன்று சிலநேரம் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் நாளை முதல் அது தவிர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனமொன்றை பல சோதனைச் சாவடிகளில் நிறுத்த வேண்டிய நிலையை தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையை சார்ந்தவர்களின் வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான ஸ்டிக்கர் ஒட்டப்படும். முப்படையினர் மற்றும் பொலிஸாரின் வாகனங்களுக்கு இலகு நீல நிற ஸ்டிகர் ஒட்டப்படும்.

Related posts

முச்சக்கர வண்டி பயணக் கட்டணம் குறைப்பு

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ராஜிதவுக்கு எதிரான மனு விசாரணை செவ்வாயன்று