கேளிக்கை

கொரோனா ஊடுருவலால் டாம் குரூஸ் படப்பிடிப்பு நிறுத்தம்

(UTV | அமெரிக்கா) –  ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு இருக்கும். இதுவரை மிஷன் இம்பாசிபிள் 6 பாகங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது இதன் 7வது பாகம் தயராகி வருகிறது. 6வது பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குயரோ 7வது பாகத்தையும் இயக்குகிறார்.

அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் படத்தின் படப்பிடிப்புகள் லண்டன் அருகில் உள்ள ஒரு கைவிடப்பட்ட விமான நிலையத்தில் ஷெட் அமைத்து படமாக்கப்பட்டு வந்தது. பல லட்சம் டாலரில் இங்கு ஒரு பிலிம் சிட்டியே உருவாக்கப்பட்டு, அங்கு செல்வோர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக படத்தில் இடம்பெறும் ஒரு நைட்கிளப் காட்சியை படமாக்கி வந்தனர். இதில் டாம் க்ரூஸுடன் இணைந்து 50க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடித்தனர். இவர்களில் 4 நடனக் கலைஞர்கள், 10 தொழிலாளர்கள் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டாம் குரூஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவர் மீண்டும் 14 நாட்களுக்கு பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அதுவரை படப்பிடிப்பு குழுவினரும் லண்டனிலேயே தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் படத்தை தயாரிக்கும் பேரமவுண்ட் நிறுவனத்திற்கு பெரும் பண இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Related posts

பலரின் கண்களை பறித்த ஸ்ருதி

சர்கார் படத்துக்கு வந்த சோதனை

மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்