கிசு கிசு

சந்திமால் – பியூமி : கொரோனா கொத்தணி?

(UTV | கொழும்பு) –  பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விருந்துபசாரம் இடம்பெற்ற கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விருந்தகத்தின் சமையற்கலை நிபுணர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு பணியாற்றும் மேலும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் அண்மையில், அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹங்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…

கொள்ளுப்பிட்டி பிராண்டிக்ஸ் 07 பேருக்கு கொரோனா : ஒருவர் தெஹிவளை

பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை?