உலகம்

அதிவேகத்தில் பரவும் டெல்டா வைரஸ்

(UTV | இங்கிலாந்து) – டெல்டா வைரஸ் பரவலால் பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்படாமல் போகலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. அண்மை வாரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

ஜூன் 21ஆம் திகதியுடன் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் பரவத் தொடங்கிய டெல்டா கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவி வருவது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா வைரஸ் பரவலால் ஊரடங்கு தளர்த்தப்படாமல் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா வைரஸ் இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில்தான் பரவத் தொடங்கியது. தற்போதைய நிலையில், இங்கிலாந்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 60 விழுக்காட்டினர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பு : உலக சுகாதார அமைப்பினால் கொரோனாவின் மூன்றாம் அலைக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“சீனா ஆபத்துடன் விளையாட முனைகிறது” – ஜோ பைடன்

அமெரிக்க தூதரகத்தின் மீது ஈராக்கில் ரொக்கெட் தாக்குதல்

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 9,000 உக்ரைன் இராணுவ வீரர்கள் பலி