உள்நாடு

MV Xpress pearl : எண்ணெய் கசிவுத் தகவல் இல்லை

(UTV | கொழும்பு) – மூழ்கி கொண்டிருக்கும் எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பல் தொடர்பில் இந்திய கடற்படை தளபதி மற்றும் நாட்டின் கடற்படை தளபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கம்பீர் சிங் நேற்று (02) மாலை தொலைபேசி ஊடாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

தற்போதைய நிலையில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குவது தொடர்பில் இரு நாடுகளின் கடற்படை தளபதிகளும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை கப்பலை தற்போதுள்ள இடத்தில் இருந்து அகற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வணிக கப்பல் செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை என அந்த காரியாலயத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாவது எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அந்த எண்ணெய் படலம் பரவுக்கூடிய பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி எண்ணெய் படலம் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மிதவைகள் போதுமான அளவு தயார் நிலையில் உள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்

சிசுக்களை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடி அம்பலம்!

பாடசாலை விடுமுறை தொடர்பான தீர்மானம்!