கிசு கிசு

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான புதிய நடைமுறை

(UTV | கொழும்பு) – தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 07ம் திகதியின் பின்னர் தளர்த்தப்பட்ட போதிலும் வீடுகளில் இருந்து வெளியேறுவோர் அடையாள அட்டை இலக்கத்தின்படி ஒருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

07ம் திகதியின் பின்னர் தொழில்களுக்கு செல்வோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் அடையாள அட்டையின் கடைசி இலக்கப்படி அத்தியாவசிய தேவை நிமித்தம் ஒரு வீட்டில் இருந்து ஒருவருக்கு வெளியே செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாட்டினை எதிர்வரும் 07ம் திகதியின் பின்னர் நீடிக்க இதுவரையில் எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும், இது தொடர்பில் கொவிட் – 19 தடுப்புக்கான செயலணி மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாட்டின் பிரதிபலன்கள் எதிர்வரும் 10ம் திகதி கண்டுகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு?

ஐ. தே. கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்றத்திற்குள் வந்திருந்தனர்?

பிரிட்டன் குட்டி இளவரசர் ஆர்ச்சி-க்கு பிரியங்காவின் விலையுயர்ந்த பரிசு