(UTV | கொழும்பு) – கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம் பெற்ற வங்கிகளின் கடன் பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கோரியுள்ளது.
இதன்படி, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) இவ்வாறு மத்திய வங்கி கோரியுள்ளது.