உலகம்

விமான விபத்தில் ஜோ லாரா உட்பட 7 பேர் பலி

(UTV |  டென்னசி, அமெரிக்கா) – அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் டாஸன் கதாப்பாத்திரத்தில் நடித்த ஜோ லாரா உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

டென்னசி மாகாணத்தின் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. இதன்போது விமானத்தில் ஜோ லாரா உட்பட 7 பேர் இருந்தனர்.

புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து விமானம் ஏரியில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் ஜோ லாராவின் மனைவியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இங்கிலாந்தில் 15 பிரதமர்களை கண்ட ராணி எலிசபெத்

கொரோனா தொற்று : 83 இலட்சத்தை நெருங்குகிறது

முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்