விளையாட்டு

இந்தியா அணியின் அடுத்த தலைவராக “ரோஹித்”..

(UTV |  மும்பை) – இந்திய அணியின் அடுத்த தலைமை வாய்ப்பு விரைவில் ரோஹித் ஷர்மாவுக்கு கிடைக்கலாம் என முன்னாள் வீரர் கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில், டி20, ஒருநாள், டெஸ்ட் என்று மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் தலைவராக இருப்பவர் விராட் கோலி. எனினும், இவரது ஆட்டத்திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.

பிரஷர் அதிகமாக இருந்தாலும், தனது ஓட்ட வேட்டையில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். எனினும், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது தலைமை குறித்து அவ்வப்போது சில சலசலப்புகள் எழுந்து போனதை வரலாறு அறியும்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் வெவ்வேறு வடிவங்களுக்கு, வெவ்வேறு தலைமைகள் விரைவில் நியமிக்கப்படலாம் என இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய விக்கெட் காப்பாளருமான கிரண் மோரே கூறியுள்ளார். இவரது இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் இந்தியா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு தலைவர் என்ற அணுகுமுறையை நோக்கி நகர்வதாக நான் நினைக்கிறேன். இதனால், ரோஹித் ஷர்மாவுக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். விராட் கோலி, முன்னாள் தலைவர் தோனி தலைமையில் விளையாடிய ஒரு புத்திசாலி தலைவன். கோலி, ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு இன்னும் எவ்வளவு காலம் தலைவனாக இருக்க வேண்டும் என்பது குறித்து கோலியும் சிந்திப்பார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த முடிவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.

Related posts

லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று

ஐ.பி.எல். போட்டியில் டோனி படைத்த புதிய சாதனை

குசல் மெண்டிஸும் சதம் அடித்தார்