உள்நாடு

தனியாரிடம் உள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் போலியானவை

(UTV | கொழும்பு) –  அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை எந்தவொரு தனியார் வர்த்தகர் அல்லது நிறுவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்ய வேண்டாம் என அஸ்ட்ராசெனகா நிறுவனம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு அஸ்ட்ராசெனகா நிறுவனத்தினால் அனுப்பபட்டுள்ள கடிதமொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் போலியானதாக இருக்கக்கூடும் என்பதினால் கொள்வனவு செய்ய வேண்டாம் என தாம் வலியுறுத்துவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

நாட்டில் ஏற்கனவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியினன செலுத்திக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிக்காக 6 இலட்சம் மருந்துகள் தேவையாக உள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தமை காரணமாக சீரம் நிறுவனத்தினால் இலங்கைக்கு உறுதியளித்தப்படி இரண்டாவதாக செலுத்த வேண்டிய அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வழங்க முடியாது போனது.

எனினும் தடுப்பூசிகளை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்பதற்காக அதிக விலையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்தது.

இதற்காக 15 க்கும் மேற்பட்ட சர்வதேச தனியார் நிறுவனங்களுடன் இலங்கையின் அரசாங்க அதிகாரிகள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட தடுப்பூசிகளின் தரத்தினை உறுதி செய்ய அஸ்ட்ராசெனகா தாய் நிறுவனத்தை அரசாங்க அதிகாரிகள் அனுகியிருந்தனர்.

இதனையடுத்தே தனியாரிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அஸ்ட்ராசெனகா நிறுவனமானது இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

பெட்ரோல் கப்பல் இந்த வாரம் இலங்கைக்கு

பேரூந்துக்கு தீ வைப்பு : ஆர்ப்பாட்டம் பதற்ற நிலையிலும் தொடர்கிறது

இன்று இதுவரையில் 356 தொற்றாளர்கள் பதிவு