(UTV | கொழும்பு) – நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் 19 தடுப்பு செயலணி ஆகியோருக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தும் விடயத்தில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 25ம் திகதி தளர்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.