உள்நாடு

‘இலங்கையின் நிலைமை கவலைக்கிடம்’

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இலங்கையின் நிலைமை மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளதென, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகின்றதென, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய நிலைமை, மிகவும் மோசமானதாக மாறியுள்ளதென்று தெரிவித்துள்ள அவர், நேபாளம், இலங்கை, வியட்நாம், காம்போஜி, தாய்லாந்து மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், அவசரத் தேவையின் நிமித்தம் காணப்படும் நாடுகளாக மாறியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி, தடுப்பூசி ஏற்றுவதும் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுமே ஆகுமென்று, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

‘Sinopec’ நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளது

வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை நீக்கியது இந்தியா